மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்த  அகவிலைப்படி,டிஆர் உயர்வு நிறுத்திவைப்பு: எப்போதுவரை நிறுத்தம்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
Updated on
1 min read


கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி, டிஆர் உயர்வு 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரை நிறுத்திவைப்பதாக நிதியமைச்சகம் இன்று முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி கடந்த மார்ச் 13-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் 17 சதவீதம் அகவிலைப்படி 21 சதவீதமாக அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டு அரசுக்கு கூடுதலாக ரூ.15,500 கோடி செலவாகும் எனத் தெரிவி்க்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாக பரவி வரும் சூழலில் மத்திய அரசு நிதி ஆதாரங்கள் அனைத்தையும், மருத்துவத்துக்கும், நிவாரணத்துக்கும் திருப்பிவிட்டு வருகிறது. இந்த சூழலில் மத்தியஅரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி, டிஆர் உயர்வு இரண்டையும் வழங்கினால் பெரும் நிதிச்சிக்கல் ஏற்படும் என்பதால், அடுத்த ஆண்டு ஜூலை வரை நிறுத்திவைக்க நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசுக்கான செலவு பராமரிப்புத்து கூறுகையில், “கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றின் உயர்வை 2020, ஜனவரியிலிருந்து வழங்கப்படாது. மேலும் கூடுதல் நிலுவையாக டிஏ, டிஆர் 2020, ஜூலை1 முறையே 2021, ஜனவரி1 ஆகியவையும் வழங்கப்படாது. அதேசமயம், தற்போதுள்ள நிலையின்படியே வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ 2021-22 நிதியாண்டில் மத்திய அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் டிஏ, டிஆர் ஆகியவற்றுக்காக மொத்தம், ரூ37,530 ெசலவிட வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசின் டிஏ, டிஆர் முறையையே பின்பற்றி வருகின்றன.மாநில அரசுகளும் இந்த உயர்வை நிறுத்தினால் ரூ.82,566 கோடி சேமிக்க முடியும். மத்திய அரசு,மாநில அரசுகளும் இ்ந்த உயர்வை நிறுத்துவதன் மூலம் ரூ.1.20லட்சம் கோடி சேமிக்க முடியும். கரோனாவுக்கு எதிரான போரில் இன்னும் வேகமாகச் செயல்பட முடியும்” எனத் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in