Last Updated : 23 Apr, 2020 09:42 AM

 

Published : 23 Apr 2020 09:42 AM
Last Updated : 23 Apr 2020 09:42 AM

இந்தியாவில் கரோனா வைரஸிலிருந்து குணமடையும் விகிதம் 20% முன்னேற்றம்

புதனன்று இந்தியாவில் 50 பேர் கரோனாவில் பலியாகியுள்ளனர். ஆனால் 3,959 நோயாளிகள் குணமடைந்ததன் மூலம் குணமடையும் விகிதம் தோராயமாக 20% முன்னேற்றம் கண்டுள்ளது.

கரோனாவுக்கு 21, 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 20971 பேர் கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களின் தரவுகளின் படி பலி எண்ணிக்கை 683. பாதிக்கப்பட்ட 21,324 கேஸ்களில் 16,493 ஆக்டிவ் கேஸ்கள் ஆகும். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 5,649 கேஸ்கள். குஜராத்தில் 2,407, டெல்லியில் 2248 ஆகும்.

மாநிலங்களிலிருந்து சாம்பிள்களைச் சேகரித்து ரேபிட் கிட் கருவி சோதனையின் பயன்கள் மற்றும் வீச்சு குறித்து மதிப்பிடப்போவதாக ஐசிஎம்ஆர் உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் மருத்துவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக சுகாதார அமைச்சகம் கூறும்போது, “சுகாதார ஊழியர்களின் திறமையும் சேவையும் மற்ற தொழில்பூர்வ ஊழியர்களை விடவும் ஒரு தனித்துமான இடத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மனித வளம் உள்ளிட்ட பலதரப்பட்ட அளவுகோல்களைக் கையாண்டு ஊழியர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான உரிய நேர ஊதியம், திறன் வளர்ப்புப் பயிற்சிகள், உளவியல் ஆதரவு, ஆயுள் காப்பீடு ஆகியவற்றை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளது.

ரேபிட் கிட் கருவி மூலம் சோதனை பெரும்பாலும் கண்காணிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுவதாகும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x