மொபைல்போன் மூலம் ஆய்வு; மத்திய அரசு திட்டம்
தேசிய தகவல் மையத்தின் மூலமாக 1921 என்ற எண்ணில் இருந்து, குடிமக்களுக்கு, அவர்களின் அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, அலைபேசி வாயிலான ஆய்வு ஒன்றை மத்திய அரசு நடத்தவிருக்கிறது.
தேசிய தகவல் மையத்தின் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்று அறிகுறிகள் உள்ளனவா, எங்கெங்கு பரவலாக உள்ளன என்பதைக் கண்டறிவதற்கான முறையான கருத்துக்கள் கிடைக்க உதவும் வகையில், குடிமக்கள் அனைவரும் இந்த ஆய்வில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேசமயம் இதுபோன்ற ஆய்வு நடத்துகிறோம் என்ற பெயரில் வேறு ஏதேனும் எண்ணிலிருந்து போலியான அழைப்புகள் வந்தால் அல்லது வேறு எண்கள் ஏதாவதிலிருந்து அல்லது ஏமாற்று அழைப்புகள் வந்தால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஆய்வு குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் அதிகாரபூர்வ தன்மையையும் மக்களுக்கு எடுத்துக்கூறி, மற்ற போலி எண்கள் அல்லது ஏமாற்றுபவர்கள் அல்லது வேறு எண்களில் இருந்து வரக்கூடிய ஏமாற்று அழைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாநில சுகாதாரத் துறையின் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் மற்றும் இதர துறைகளின் இணையதள முகப்புப் பக்கத்தில் இந்த ஆய்வு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
