மற்றவர்களை எதிரிகளாக நினைப்பதா தேசப்பற்று?

மற்றவர்களை எதிரிகளாக நினைப்பதா தேசப்பற்று?
Updated on
2 min read

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் சூழலில் இருக்கும் இந்தக் காலத்தில் தொலைக்காட்சி அனலிஸ்ட்டாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. போர் என்றால், உண்மையான போர் அல்ல. இந்தியாவின் பொக்ரானி லும் பாகிஸ்தானின் சகாய் பகுதியிலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அணுகுண்டு சோதனை நடத்திய பிறகு போர் என்பது இல்லை. எதாக இருந்தாலும் நாம் பேச வேண்டும்.

நாம் விரும்பும் எந்த விஷயத்தை யும் தகவலையும் ஸ்கைப், தொலைபேசி, இ-மெயில் இன்னும் பல வழிகளில் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும். இந்த சூழ்நிலையில், நாம் ஏன் இரு தரப்பினர் சந்திப்பதைத் தடுக்க வேண்டும்? இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் உள்ள சர்வதேச ராஜதந்திரம் புரியவில்லை. எப்படியோ இருக் கட்டும், நான் சொல்ல வந்தது என்னவெனில், வெளிப்படையான எண்ணம் கொண்டவர்களால் இந்தக் காலத்தில் தொலைக்காட்சி அனலிஸ்ட்டாக இருப்பது கஷ்டம்.

அரசியல் சார்புடனோ அல்லது தேசப்பற்றுடனோ மற்றவர்கள் ஸ்டுடியோவுக்குள் வருவதைப் போல் என்னால் வரமுடியவில்லை. என்னைப் பொறுத்த வரையில், செய்தியின் உண்மை தன்மையும் அதன் கருத்தும் மிக முக்கியம். இந்தியாவில் தேசப்பற்றின் இயல்பு என்ன? அது பாகிஸ்தானுக்கு எதிராக இருப்பது; சீனாவுக்கு எதிராக இருப்பது. இதை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். நமக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அல்லது இந்தியாவுக்கு எந்த பிரயோஜ னமும் இல்லாவிட்டாலும்கூட நாம் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்க வேண்டும் (பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸை, காஷ்மீர் ஹுரியத் தலைவர்கள் சந்தித்து பேசுவது தடுக்கப்பட்டதால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இல்லை).

எதிரியுடன் ஏதாவது பேசி விடுவார்களோ என்ற பயத்தில், நமது குடிமக்களை நாமே காவலில் வைக்கும் நிலையில், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று திரும்பத் திரும்ப மக்களிடம் சொல்வதற்கு மட்டும் நாம் சலிப்படைவதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாம் உறுதியான குடியரசு இல்லை என்பதை நாம் வெளிப்படுத்து கிறோம். மேலும் ஒருவர் குறிப்பிட்ட விஷயத்தில், குறிப்பிட்ட கருத்து வைத்திருந்தால், அவர் இப்படித்தான் என்று பொதுவாக முத்திரை குத்தி விடுகிறோம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை பிடித்துக் கொண் டுள்ளோம். அதற்கு இடதுசாரி என்றும் வலதுசாரி என்றும் லிபரல் என்றும் பெயர் வைத்து பயன்படுத்தி வருகிறோம். இவற்றின் அர்த்தம் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளாமலேயே பயன்படுத்துகிறோம். இதற்கு வெறுப்புணர்வு அடிப்படையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். உதாரணமாக இந்துத்வா என்பது. இது இந்துக்களுக்கு பெரிதாக எதுவும் தந்துவிடப் போவதில்லை. மாறாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக கோபத்தையும் கசப்புத் தன்மையையும்தான் தூண்டும்.

இதுபோல் வெறுப்புணர்ச்சி உள்ளவர்களால் தங்கள் எண் ணத்தை மாற்றிக் கொள்வது கடினம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் தங்கள் உணர்ச்சிகளையும் எண்ணத்தையும் மாற்றிக் கொள்வது சிரமம். ஆனால், ஏன் இப்படி நாம் எல்லோரும் இருக்கிறோம். என்னால் அப்படி இருக்க இயலாது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ஒரு விவாதத்தின் போது, “இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடக்காமல் போனால், அதற்கு பாகிஸ்தானை தான் காரணம் சொல்ல வேண் டும். ஸ்டுடியோவில் நாங்கள் பேசுகையில் இதை ஒப்புக் கொண்டோம்” என்றார். இந்த விஷயம் இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையில் நடக்கிறது. இந்தியர்களாகிய நாம் எல்லோரும் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற அனுமானம்தான் இதற்கு காரணம். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை.

கோடு போட்டாயிற்று, இரு தரப்பும் சண்டைக்கு சென்று விட்டார்கள். நாம் எல்லோரும், அது அரசியல்வாதியாகட்டும், குடிமக்களாகட்டும், கிரிக்கெட் வீரராகட்டும், வீட்டுப் பெண்ணா கட்டும்.. யாராக இருந்தாலும், எதிர் தரப்பில் இருப்பவர்களை எதிரிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற எண்ணம். இந்த முட்டாள்தனமான எண்ணத்தை ஏற்கமுடியவில்லை. இதனால் தொலைக்காட்சியில் வருவது எனக்கு கடினமானதாக இருக்கிறது.

பிறகு ஏன் இந்த வேலையில் நான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று புத்திசாலித்தனமாக யாராவது கேட்கலாம். அந்த வேலைக்கு எனக்கு ஊதியம் கொடுத்தார்கள். சில நேரங்களில் வேலை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுதான் காரணம். நான் நினைப்பதைப் போலவே வேறு சிலர் நினைப்பதும் மற்றொரு காரணம். அப்படி நினைப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால், முட்டாள்தனமான விஷயங்களையும் சிறுபிள்ளைத் தனத்தையும் நிராகரிப்பவர்களும் உள்ளனர் என்று நம்புகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in