Published : 22 Apr 2020 03:15 PM
Last Updated : 22 Apr 2020 03:15 PM

மோதல் இல்லை; முழு ஒத்துழைப்பு; மத்திய அரசுக்கு மேற்குவங்க அரசு உறுதி

கோப்புப் படம்

கொல்கத்தா

மத்திய அரசுடன் எந்த மோதல் போக்கையும் கடைபிடிக்கவில்லை என்றும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

மேற்குவங்கத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை நேரில் சென்று மதிப்பீடு செய்வதற்காகவும், ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிப்பதற்காகவும் மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு குழுக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் 19-ம் தேதி அன்று அனுப்பப்பட்டன.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன (NDMA) அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், நோய் நிலைமைகளை சமாளிப்பதற்கு மாநில அரசு இவர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

கரோனா தொற்றுக்கு எதிரான ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கு வங்க மாநிலத்தில செயல்படுத்தப்படுவது குறித்து பல்வேறு இடங்களுக்குச் சென்று அந்தந்த இடங்களில் உள்ள நிலைமைகள் குறித்து அங்கேயே மதிப்பீடு செய்வது, செயல்பாட்டுப் பணிகளை பரிசீலனை செய்வது ஆகியவை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொல்கத்தாவிலும், ஜல்பாய்குரியிலும் உள்ள அமைச்சரக அளவிலான மத்திய குழுவினருக்கு மாநில அரசும், உள்ளாட்சி அதிகாரிகளும், தேவையான ஒத்துழைப்பு தரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து

மேற்குவங்க மாநில தலைமைச் செயலாள் ராஜீவ் சின்காவுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி இருந்தார்.மேற்கொள்ளும் பணிகளுக்கு மேற்குவங்க அரசு எந்தவித இடையூறும் விளைவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாள் ராஜீவ் சின்கா எழுதியுள்ள பதில் கடித்தில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசுடன் எந்த மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். மத்திய குழு வருவதை தெரிவிக்காததால் போதிய வாகன ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதுபோன்ற ஏற்பாடு எதையும் மத்திய குழுவினர் கேட்காத நிலையிலும் போதிய ஒத்துழைப்பை அளித்துள்ளோம்.

கொல்கத்தா மற்றும் ஜல்பாய்குரி சென்று மத்திய குழு பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவே மேற்குவங்க அரசு விரும்புகிறது’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x