

ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு 800 என்ற எண்ணிக்கையைக் கடந்து 813 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 56 பேர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.
இதுவரை 5,757 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 5,701 மாதிரிகளில் கரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. கர்நூல் மற்றும் குண்ட்டூர் மாவட்டங்களில் கவலைக்குரிய அறிகுறிகள் அதிகமாகியுள்ளன. அங்கு 19 புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்னூலில் 203 பேருக்கும் குண்டூரில் 177 பேருக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது. 19 புதிய நோயாளிகள் பற்றி கரோனா செய்திகள் மையம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் கோவிட்-19 கமாண்ட் கண்ட்ரோல் மையத்தின் படி தப்ளிகி ஜமாத் சென்றவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகிறது.
குண்டூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் குண்டூரில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சம் இதுதான்.
ஆனால் இதே வேளையில் குண்டூரில் 8 கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திராவில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் தற்போது 669 கரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.