Last Updated : 22 Apr, 2020 08:10 AM

 

Published : 22 Apr 2020 08:10 AM
Last Updated : 22 Apr 2020 08:10 AM

10 சதவீத பங்குகளை வாங்கியது: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.43,500 கோடி முதலீடு செய்தது ஃபேஸ்புக் நிறுவனம்

மார்க் ஜூகர்பெர்க், முகேஷ் அம்பானி : கோப்புப்படம்

புதுடெல்லி

முகேஷ் அம்பானி நடத்தும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனக் குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்சின் 10 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்குவாங்கியது. அதாவது 570 கோடி அமெரிக்க டாலர்கள்(ரூ.43,574 கோடி) முதலீடு செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸில் ரூ43,574 கோடிஅளவுக்கு முதலீடு செய்து 10 சதவீதபங்குகளை ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலீடு செய்தததைத் தொடர்ந்து எங்கள் நிறுவனத்தி்ன் மதிப்பு ரூ.4.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட 4 ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களைச் சாய்த்து முதலிடத்துக்கு வந்ததுள்ளது, நாடுமுழுவதும் 38.8 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். சம அளவிலான சந்தைப் போட்டி விதிமுறைகளை வளைத்து பலநிறுவனங்களைச் சாய்த்து ஜியோ நிறுவனம் வளர்ச்சியடைந்ததாக விமர்சனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வாட்ஸ்அப்பில் 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதுவரை இன்ஸ்டாகிராமிலும் கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இரு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்துள்ளதால், எதிர்காலத்தில் புதியதிட்டங்கள் அறிவிக்கப்படலாம். இந்தியாவில் இனிமேல் இரு நிறுவனங்களும் ஆழமாக மக்களைச்சென்றடையும்.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் ஃபேக்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x