Published : 22 Apr 2020 07:18 AM
Last Updated : 22 Apr 2020 07:18 AM

தரநிலை புகார்: ரேபிட் கிட் பரிசோதனைகளை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் என்று அழைக்கப்படும் அதிவிரைவு உடல் நோய் எதிர்ப்பாற்றல் பரிசோதனை கருவிகளின் மூலம் பரிசோதனை முடிவுகள் சீரற்ற முறையில் வருவதாக சில மாநிலங்கள் புகார் அளித்ததையடுத்து ரேபிட் கிட்கள் மூலம் 2 நாட்களுக்கு சோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

“நிறைய மாறுதல்களுடன் பரிசோதனை முடிவுகள் வருகின்றன. இதனையடுத்து ரேபிட் கிட்ஸ் தன்மைகளை ஆய்வு செய்து 2 நாட்களில் நாங்க்ள் ஆலோசனை வழங்குகிறோம் அதுவரை ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்” என்று ஐசிஎம்ஆர் தலைவர் கங்காகேட்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“களத்தில் உள்ள 8 சோதனைக் கழகங்களுக்கு எங்கள் குழுவை அனுப்பி களத்திலேயே அந்த கிட்களை பரிசோதித்து வந்திருக்கும் பேட்ச்களில் சிக்கல்கள் இருந்தால் அதை திருப்பி அந்த நிறுவனத்துக்கு அனுப்பி மாற்று கிட்களை வரவழைக்க ஏற்பாடு செய்வோம்” என்று மேலும் கங்காகேட்கர் தெரிவித்தார்..

ரேபிட் கிட்கள் குறைந்தது 90% துல்லிய முடிவுகளை அளிக்க வேண்டும், ஆனால் இந்த கிட்கள் 5.4% தான் துல்லியம் காட்டுவதாக ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் புகார் அளித்ததையடுத்து இந்த அறிவிப்பை ஐசிஎம்ஆர் வெளியிட்டது.

துல்லியமற்ற முடிவுகளை இந்த கிட்ஸ்கள் அளிப்பதால் மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் தேவைப்பட்டு நோய்க் கணிப்பு கடுமையாக தாமதமாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய் கிழமை நிலவரப்படி 29,776 மாதிரிகள் 201 லேப்களில் ஐசிஎம்ஆர் நெட்வொர்க்கின் கீழ் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 86 தனியார் லேப்களில் 6,076 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x