Published : 21 Apr 2020 09:05 PM
Last Updated : 21 Apr 2020 09:05 PM

அந்தமான், லட்சத்தீவுக்கு கப்பல்களில் தானியம்: இந்திய உணவுக்கழகம் நடவடிக்கை

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 2 கப்பல்களிலும் லட்சத்தீவுகளுக்கு 7 சிறு கப்பல்களிலும் இந்திய உணவுக் கழகம் 3 மடங்கு தானியங்களை அனுப்பியுள்ளது.

ஊரடங்கின் போது அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும், லட்சத்தீவுகளுக்கும் உணவு தானிய விநியோகம் செய்ய இந்திய உணவுக்கழகம் கடந்த 27 நாட்களாக முழுமையான தீவிரத்துடன் கையாண்டு வருகிறது. இந்தத் தீவுகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கு மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு, இந்திய உணவுக்கழகம் தனது போக்குவரத்தை இயக்கி வருகிறது.

இந்தத் தீவுகள் பெரும்பாலும் பொது விநியோகத் திட்டத்தையே சார்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தீவுக்கும் சரியான நேரத்தில் உணவு தானியங்களைக் கொண்டு சேர்க்கும் பணி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய உணவுக்கழகம் கடந்த 27 நாட்களில், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 2 கப்பல்களையும், லட்சத்தீவுகளுக்கு 7 சிறிய கப்பல்களையும் அனுப்பியுள்ளது. இந்தத் தீவுகளுக்கு சாதாரண காலத்தில் அனுப்பப்படும் மாதாந்திர உணவுப்பொருள்களின் அளவை விட ,தற்போது இரு மடங்குக்கும் அதிகமாக அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரையிலான 27 நாள் ஊரடங்கின் போது, மங்களூர் துறைமுகத்திலிருந்து சுமார் 1750 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் லட்சத்தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வழக்கமான 600 மெட்ரிக் டன் என்ற மாதாந்திர சராசரி அளவை விட மூன்று மடங்காகும். இதேபோல, சுமார் 6500 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து போர்ட் பிளேருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது, வழக்கமான சராசரி அளவான 3000 மெட்ரிக் டன்னை விட இருமடங்காகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x