Published : 21 Apr 2020 08:40 PM
Last Updated : 21 Apr 2020 08:40 PM

ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் கையிருப்பு இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி

ரத்த வங்கிகளில் போதிய ரத்த கையிருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறைகளுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடிதம் எழுதி உள்ளார்.

குறிப்பாக, தலசீமியா, அரிவாள் செல் சோகை மற்றும் ஹீமோபிலியா என்னும் குருதி உறையாமல் போகும் தன்மை ஆகிய ரத்த குறைபாடுகளால் தொடர் ரத்த மாற்றம் தேவைப்படுவோருக்காக அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஒவ்வொரு ரத்தப் பிரிவின் தற்போதைய கையிருப்பு குறித்தான நிகழ்நேர நிலையைக் கண்காணிக்க 'ஈ-ரக்த்கோஷ்' என்னும் ஆன்லைன் தளைத்தை உபயோகப்படுத்துமாறும் அவர் கூறினார்.

கரோனா மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக, 24x7 கட்டுப்பாட்டு அறை ஒன்றை ரத்த சேவைகளுக்காக செஞ்சிலுவை சங்கம் டெல்லியில் ஆரம்பித்துள்ளது. 011-23359379, 93199 82104, 93199 82105 என்பது அதன் எண்களாகும்.

இன்றைய தேதி வரை, 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 14995 ஆயுஷ் வல்லுநர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 மாவட்டங்களில் 3492 தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் 553 தேசிய மாணவர் படை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x