Published : 21 Apr 2020 08:30 PM
Last Updated : 21 Apr 2020 08:30 PM

டெல்லி போலீஸாருக்கு 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள்: ரயில்வே ஏற்பாடு

கரோனா தொற்றுக்கு எதிரான போரில் வீதிகளில் இறங்கி பணியாற்றி வரும் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு இந்திய ரயில்வே 10000 தண்ணீர் பாட்டில்களை வழங்கத் தொடங்கியது. இதுவரை 50000 தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தகிக்கும் கோடையின் சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாது, காவல்துறையினர் நாள் முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து வீதியில் இறங்கி பணியாற்றுவதோடு, பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் இணைந்து சவாலான சூழ்நிலைகளிலும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

போர் வீர்ர்கள் போன்று முன்னணியில் இருந்து போராடும் காவல் துறையினரை ஆதரித்து நன்றி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், கரோனாவை எதிர்ப்பதில் தேசிய முயற்சிகளுக்கு துணைபுரியும் விதமாக இந்திய ரயில்வே இந்த முயற்சியை நீடித்துள்ளது. .

இந்த முயற்சியின் கீழ் இந்திய ரயில்வே தனது பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி உதவியுடன் ஏப்ரல் 16-ம் தேதி முதல் டெல்லியில் ஒரு நாளைக்கு 10000 ரயில்நீர் தண்ணீர் பாட்டில்களை இலவசமாக விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இந்த 10000 ரயில்நீர் தண்ணீர் பாட்டில்கள் தலா ஒரு லிட்டர் அளவிலானவை. அவை நாங்லோய் ரயில்நீர் ஆலையில் இருந்து எடுக்கப்படுகின்றன. இதுவரை 50000 க்கும் மேற்பட்ட பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x