எல்லையில் பாகிஸ்தான் 52-வது முறையாக அத்துமீறல்

எல்லையில் பாகிஸ்தான் 52-வது முறையாக அத்துமீறல்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானிடையே எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதில்லை என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 245 முறையும் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 52 முறையும் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்றைய சம்பவம் (ஞாயிற்றுக்கிழமை) குறித்து பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "நேற்று மாலை 7 மணி முதல் 7.20 மணி வரை பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. தானியங்கி ஆயுதங்களாலும் பீரங்கிக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in