கரோனா தொற்று குறைகிறது; இரட்டிப்பாகும் நாள் 7.5 ஆனது: மத்திய அரசு தகவல்

கரோனா தொற்று குறைகிறது; இரட்டிப்பாகும் நாள் 7.5 ஆனது: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

ஊரடங்கு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் கரோனா தொற்று இரட்டிப்பாகும் அவகாசம் 7.5 நாட்களாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நோயின் தாக்கம் ஏற்படுத்தும் வேகம் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது:

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

ஊரடங்கு அமலுக்கு முன்பு இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகும் அவகாசம் 3.4 நாட்களாக இருந்தது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் அவகாசம் தற்போது 7.5 நாட்களாக மாறியுள்ளது.

தேசிய சராசரியைவிட இது அதிகமாக உள்ளது. அதாவது, நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைமை ஓரளவுக்கு குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in