

ரூ.9,000 கோடி வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தக் கோரும் வழக்கில் விஜய் மல்லையா செய்திருந்த மேல்முறையீட்டு மனு பிரிட்டன் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் மல்லையா இந்த மேல்முறையீட்டு மனுவை மேற்கொண்டார்.
லண்டன் ராயல் கோர்ட்ஸ் ஆஃப் ஜஸ்டிசின் லார்ட் ஜஸ்டிஸ் இர்வின், மற்றும் நீதிபதி எலிசபெத் லெய்ங் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது, இது கரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “இந்த வழக்கின் முதல் நோக்கில் மூத்த மாவட்ட நீதிபதி கண்டடைந்த விஷயங்கள் இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்ட விஷயங்களை விடவும் விரிவானதாக உள்ளது என்பதாக பரிசீலிக்கிறோம், 7 முக்கிய விதங்களில் இந்திய குற்றச்சாட்டுகளுடன் முதல் நோக்கில் வழக்கு விவகாரம் ஒத்துப் போகிறது.” என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக உத்தரவிட்டனர்.