ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
Updated on
1 min read

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரி்லிருந்து தனது நடவடிக்கை கள் அனைத்தையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த தகவலை மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று தெரி வித்தார். அவர் கூறியதாவது:

கில்ஜித்-பல்டிஸ்தான் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரில் சீனர்கள் நடமாட்டம் இருப்பதாக செய்திகள் வந்துள்ளதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களது செயல்பாடுகள் பற்றி சீனாவிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியல் சீன கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல் கள் அதிக அளவில் வருவது பற்றிய செய்திகளையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. கடல் கொள்ளை தடுப்புக்காக ஏடன் வளைகுடா பகுதியில் 2009ம் ஆண்டு ஜனவரியிலிருந்து சீனா தனது கடற்படை கப்பல்களை அனுப்பி யுள்ளது. இதுவரை 20 முறை இந்த கப்பல்கள் சென்றுள்ளன என்று பாரிக்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in