

கரோனா பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, புதிதாக 1,553 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மொத்தமாக பாதிப்பு எண்னிகை 17,265 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பலி எண்ணிக்கை நாட்டில் 543 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 14,175 கேஸ்கள் உயிர்ப்புடன் உள்ளன. 2,547 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36 கரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா நாட்டிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது, அங்கு மொத்தம் 4,203 கேஸ்கள் உள்ளன. 507 பேர் குணமடைந்துள்ளனர். 45 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் 1478 கேஸ்கள் உறுதியாகியுள்ளன. இதில் 183 பேர் குணமடைந்துள்ளனர். 14 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 1477 கரோனா கேஸ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. 411 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் வைரசுக்குப் பலியாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் பாதிப்பு 1,407, இதில் 127 பேர் குணமடைந்ததும் 70 பேர் பலியானதும் அடங்கும்.
உத்தரப்பிரதேசத்தில் 1084 கரோனா நோயாளிகள் உள்ளனர். கேரளாவில் 402 பேர் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யில் மேலும் 12 புதிய தொற்றுக்களும், ராஜஸ்தானில் மேலும் 17 புதிய தொற்றுக்களும்,ஒடிசாவில் 7 பேருக்கு புதிதாக கரோனா தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.