

ஊரடங்கு உத்தரவு இன்று முதல் சற்று தளர்த்தப்படும் என்ற போதி லும் புலம்பெயர்ந்த தொழிலாளர் கள் மாநிலம்விட்டு மாநிலம் செல்ல தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்ட போதிலும், கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது.
இந்த ஊரடங்கால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை முடங்கி யிருப்பது ஒருபுறம் இருக்க, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தங்கள் மாநிலங்களுக்கு செல்வதற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பின்னர், இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், அவர் களை அந்தந்த மாநிலங்களிலேயே தனி முகாம்களில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு தேவையான உணவு, தூய்மையான குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தியது. இதன்பேரில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் பணி புரிந்த மாநிலங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்திருப்பதை கருத்தில் கொண்டு, ஊரடங்கை சற்று தளர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, வைரஸ் தாக்கம் இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் (இன்று) மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கூரியர் சேவைகள், நிதிசார் துறைகள் ஆகியவை இயங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்தச் சூழலில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் எழும் குழப்பத்தை களைவதற்காக மத்திய அரசு சார்பில் நேற்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
புலம்பெயர்ந்த தொழிலாளர் கள் தற்போது தங்க வைக்கப்பட் டிருக்கும் மாநிலங்களுக்குள்ளே, பணி நிமித்தமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் அந்தந்த மாநிலங்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் தங்களின் பெயர், வயது, பணி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம், அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்க உள்ளாட்சி நிர் வாகத்தினர் நடவடிக்கை எடுப்பர்.
மேலும் தொழிற்சாலைகள், உற் பத்தித் துறைகள், கட்டுமானம், விவசாயம், தேசிய ஊரகப் பணிகள் ஆகியவற்றில் அவர்களை உள் ளாட்சி நிர்வாகம் பணியமர்த்தலாம். ஆனால், பணியமர்த்துவதற்கு முன்பாக அவர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.