Last Updated : 19 Apr, 2020 11:54 AM

 

Published : 19 Apr 2020 11:54 AM
Last Updated : 19 Apr 2020 11:54 AM

ம.பி. மாநிலம் இந்தூரில்  துயரம்: போலீஸ், பெண் மரணம்- கரோனா பலி எண்ணிக்கை 49 ஆனது

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் 41 வயது போலிஸ் இன்ஸ்பெக்டர், 70 வயது பெண் ஆகிய இருவர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கரோனாவுக்குப் பலியாவது இந்த மாநிலத்தில் முதலாவது ஆகும்.

“போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். 20 நாட்களக இவர் கரோனாவுடன் போராடி வந்தார்” என்ரு போலீஸ் உயரதிகாரி மகேஷ்சந்திர ஜெய்ன் தெரிவித்தார்.

மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை, இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவருக்கு இந்தூர் போலீஸ் துறை அஞ்சலி செலுத்தியது. இவரைத் தெரிந்த பலரும் சமூக வலைத்தளங்களில் கோவிட்-19 போராளி என்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டரை அடுத்து 70 வயது மூதாட்டி ஒருவர் கரோனாவுக்கு பலியானார். இதுவரை இந்தூரில் 890 கோவிட் 19 கேஸ்கள் அடையாளம் காணப்பட்டன.

இந்தூரில் கரோனா மரண விகிதம் 5.5%, இது தேசிய விகிததைக் காட்டிலும் கூடுதல்.

நகர எல்லைகள் வரை மநிலம் மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x