மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் சிகிச்சை வார்டின் 2 மருத்துவர்கள் 6 செவிலியர்களுக்குக் கரோனா: 10 மாதக் குழந்தையின் கரோனா பாசிட்டிவ் காரணமா?

மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் சிகிச்சை வார்டின் 2 மருத்துவர்கள் 6 செவிலியர்களுக்குக் கரோனா: 10 மாதக் குழந்தையின் கரோனா பாசிட்டிவ் காரணமா?
Updated on
1 min read

டெல்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் இருவர் மற்றும் செவிலியர்கள் ஆறு பேருக்கு கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை தடம் கண்டு வருகின்றனர்.

இவர்கள் மருத்துவமனையின் குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியவர்கள். கடந்த சில நாட்களாக இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் யார் யார்? அவர்களில் எத்தனை பேருக்குக் கரோனா என்று மருத்துவமனை கவலை வெளியிட்டுள்ளது.

இந்த மருத்துவமனைக்கு சமீபத்தில் 10 மாத குழந்தை ஒன்று சுவாசக்குழல் பிரச்சினைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழந்தைக்கு கரோனா பாசிட்டிவ் என்று டெஸ்ட்டில் தெரியவந்தது.

இதனையடுத்து இந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள், உடனிருந்த 6 செவிலியர்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

தற்போது குழந்தகள் பிரிவு தீவிர சிகிச்சை வார்டு முழுதும் சானிட்டைஸ் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in