Published : 25 Aug 2015 09:13 AM
Last Updated : 25 Aug 2015 09:13 AM

105 ஆண்டுகள் பழமையான: உருது மொழியில் எழுதப்பட்ட துளசி ராமாயண புத்தகம் கண்டுபிடிப்பு

டெல்லியில் பழைய பொருட்கள் விற்கும் சந்தையில் 108 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிட்ட உருது மொழியில எழுதப்பட்ட ஸ்ரீராமசரித்மானஸ் (துளசி ராமாயணம்) கிடைத்துள்ளது.

டெல்லி கவுஸ் காஸ் பகுதியில் 3 ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய புத்தக குவியலில் இருந்து இந்த புத்தகம் கண்டெடுக்கப்பட்டது. இதனை கோயில் அர்ச்சகர் குடும்பத்தினர் வெறும் 600 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.

இந்த துளசி ராமாயண புத்தகம் லாகூரில் 1910-ம் ஆண்டு அச்சிடப்பட்டதாகும். காசியில் துளசி படித்துறை அருகே அமைந்துள்ள சங்கத் மோச்சா கோயிலில் துளசிதாசர் தொடர்புடைய அரிய ஓலைச்சுவடிகளும் பழமையான புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்தன.

அவை முன்பு ஒருமுறை ஒட்டுமொத்தமாக திருடு போனது. அப்போது உருது மொழியில் எழுதப்பட்ட இந்த துளசி ராமாயண புத்தகமும் காணாமல் போய்விட்டது.

இதையடுத்து சக்கத் மோச்சா கோயில் அர்ச்சகர் தனது இரு மகன்களுடன் நாடு முழுவதும் உள்ள பழைய பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சென்று கோயிலில் இருந்து திருடுபோன பொருட்களை தேடி வந்தனர்.

இப்போது டெல்லியில் இந்த அரிய புத்தகம் கிடைத்துள்ளது. இந்த உருது மொழி துளசி ராமாயணத்தை 1904-ம் ஆண்டு பரத் லால் ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார்.

1910-ம் ஆண்டு லாகூர் ஹால்ப் டன் பிரஸில் புத்தகமாக அச்சடிக் கப்பட்டுள்ளது. 20 பக்க முகவுரையுடன் கைகளால் வரையப்பட்ட 4 படங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. இதில் ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமான் தவிர சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

1910-ம் ஆண்டு லாகூர் ஹால்ப் டன் பிரஸில் புத்தகமாக அச்சடிக் கப்பட்டுள்ளது. 20 பக்க முகவுரையுடன் கைகளால் வரையப்பட்ட 4 படங்களும் இப்புத்தகத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x