Published : 19 Apr 2020 07:24 AM
Last Updated : 19 Apr 2020 07:24 AM

வைரஸ் பாதிப்பை கண்டறிய மே மாதம் முதல் 20 லட்சம் பரிசோதனை கருவிகள்: உள் நாட்டிலேயே தயாரிக்க திட்டம்

கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக, வரும் மே மாதம் முதல் மாதந்தோறும் 20 லட்சம் பரிசோதனை கருவிகளை நம் நாட்டி லேயே தயாரிக்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த மத்திய அமைச்சர்கள் அடங் கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.

கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய தற்போது பிசிஆர் பரி சோதனை நடத்தப்படுகிறது. இதற்கு தேவையான பரிசோதனை கருவிகள் சீனா, சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

கேரள தலைநகர் திருவனந்தபுரத் தில் செயல்படும்  சித்ரா திரு நாள் மருத்துவ அறிவியல் நிறு வனம், உள்நாட்டிலேயே பிசிஆர் பரி சோதனை கருவியை வடிவமைத்துள் ளது. இந்தப் பரிசோதனை கருவி களை உள்நாட்டில் தயாரிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. வரும் மே மாதம் முதல் மாதந்தோறும் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் தயாரிக்கப்பட உள்ளன.

மேலும் 'ஆன்டிபாடி' எனப்படும் விரைவு பரிசோதனைக்கான கருவி யையும்  சித்ரா திருநாள் மருத் துவ அறிவியல் நிறுவனம் வடி வமைத்துள்ளது. வரும் மே மாதம் முதல் மாதந்தோறும் 10 லட்சம் 'ஆன்டிபாடி' பரிசோதனைக் கருவி கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் படி, அடுத்த மாதம் முதல் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய 20 லட்சம் பரிசோதனைக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய் யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

புதிய மருந்து ஆராய்ச்சி

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறும்போது, "கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப் பதற்காக நாடு முழுவதும் 1,919 மருத்துவமனைகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்த மருத்துவமனை களில் 1 லட்சத்து 73,746 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் அவசர சிகிச்சை பிரிவுகளில் மட்டும் 21,806 படுக்கை வசதிகள் உள்ளன.

கரோனா வைரஸ் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர்கள் தேவைப் படுகின்றன. தற்போது மாதந்தோறும் 6,000 வெண்டிலேட்டர்கள் தயாரிக் கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்படுகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x