புதிய கல்வியாண்டில் கல்விக் கட்டணம் அதிகரிப்பில்லை: கேரளா சிபிஎஸ்இ பள்ளிகள் முடிவு

புதிய கல்வியாண்டில் கல்விக் கட்டணம் அதிகரிப்பில்லை: கேரளா சிபிஎஸ்இ பள்ளிகள் முடிவு
Updated on
1 min read

கேரளா பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பு மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் கவுன்சில் முக்கியமான முடிவை எட்டியுள்ளனர், அதாவது கரோனா வைரஸ் சூழ்நிலைமைகளினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் வரவிருக்கும் கல்வியாண்டில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்ற முடிவே அது.

“மேலும் ஸ்பெஷல் ஃபீஸும் வாங்குவதில்லை என்று நாங்கள் கொள்கை முடிவு எடுத்துள்ளோம். அதே போல் புதிய சீருடைகளையும் வலியுறுத்த மாட்டோம்” என்று கேரள சிபிஎஸ்இ தலைவர் இப்ராஹிம் கான் தெரிவித்தார்.

மாநில அரசின் உத்தரவுகளின் படி புதிய கல்வியாண்டில் கட்டண உயர்வில்லை. அதே போல் கடைசி டேர்ம் கட்டணங்களும் வசூலிக்கப்படவில்லை காரணம் மார்ச் தொடக்கத்திலேயே பள்ளிகள் மூடப்பட்டன, வட்டியற்ற கடன் திட்டத்தை மாநில அரசுகள் தொடங்கலாம் என்று இப்ராஹிம் கான் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்டணங்களைச் செலுத்த விரும்பும் பெற்றோர்களை ஆன் லைன் மூலம் செலுத்த அனுமதிக்கலாம் ஏனெனில் எங்களுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஊதியங்களை அளிக்க வசதியாக இருக்கும்” என்று சிபிஎஸி கேரளா கவுன்சில் தலையில் உள்ள இந்திரா ராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in