

மாநிலத்தில் உணவுப்பொருள் மற்றும் ரேஷன் பொருட்கள் ஒவ்வொருவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“முதல்வர் யோகி ஆதித்யநாத் புகலிட இல்லங்கள், தரமான உணவு மற்றும் சமூக சமையலறை ஆகியவற்றை முறையாக ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பிபிஇ கிட்கள், என் - 95 முகக்கவசங்கள் ஆகியவை அனைத்து மருத்துவமனைகளுக்கும் செல்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது உணவுப்பொருள் விநியோகத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் சாதனை படைத்துள்ளது.
முதற்கட்டமாக 7,45,618 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் 14 கோடி மக்களுக்கு மற்றும் 3, 23,87,640 ரேஷன் அட்டைகள் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 முதல் பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனாவின் கீழ் 3,38,000 மெட்ரிக் டன்கள் அரசி 1 கோடியே 78 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மொத்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சம் பேர். இதில் 44.7% மக்கள் பயனடைந்துள்ளனர். நாட்டிலேயே சாதனை உணவுப் பொருள் விநியோகமாகும் இது.
மேலும் முதல்வர் ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டையும் மூத்த அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஹாட்ஸ்பாட் பகுதி வீடுகளும் கிருமி நாசினி தெளிக்கப்படவும், வீட்டுக்கே கொண்டு செல்லும் பொருட்கள் மீது கண்காணிப்பும், பால், காய்கனிகள், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.