Last Updated : 18 Apr, 2020 07:51 AM

 

Published : 18 Apr 2020 07:51 AM
Last Updated : 18 Apr 2020 07:51 AM

ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; பண்ணை வீட்டில் குமாரசாமி மகன் திருமணம்: நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக துணை முதல்வர் உறுதி

கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுக்கு பண்ணைவீட்டில் ஆடம்பரமாக நேற்று திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் அஷ்வத் நாராயணா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘திருமணம், இறப்புஉள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலுக்கும் காங்கிரஸ்மூத்த தலைவர் கிருஷ்ணப்பா
வின் பேத்தி ரேவதிக்கும் நேற்றுபெங்களூருவை அடுத்துள்ள ராம்நகர் பண்ணை வீட்டில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மஜதவைசேர்ந்த முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஒக்கலிக வகுப்பை சேர்ந்தவர்கள், 30-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருமணம் நடந்த பண்ணை வீட்டுக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஊரடங்கு சமயத்தில் தனிநபர் விலகல் விதிமுறை மீறப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து துணை முதல்வர்அஷ்வத் நாராயணா கூறுகையில்,“கட்சி தலைவர்களும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலை
வர்களும் சட்டத்தையும், விதிமுறையையும் மீறுவது சரியல்ல.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். குமாரசாமி வீட்டுதிருமணம் குறித்து விசாரிக்கப்படும். திருமணம் தொடர்பானபுகைப்பட, வீடியோ ஆதாரங்
களை சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராம்நகர் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.

குமாரசாமி கூறுகையில், “நாங்கள் எந்த விதிமுறையையும் மீறவில்லை. திருமணத்துக்குதேவையான வாகனங்கள், விருந்
தினர்கள் பங்கேற்க ராம்நகர் மாவட்ட காவல்துறையின் அனுமதியை பெற்றுள்ளேன். போலீஸார் அனுமதித்த வாகனங்கள் மட்டுமே திருமணத்துக்கு வந்தன.

கர்நாடக அரசின் முக்கிய அதிகாரிகளிடமும் இதுகுறித்து பேசி அனுமதி பெற்றேன். அதன் பிறகே இந்த திருமணத்தை ஏற்
பாடு செய்தோம். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனையின்படி அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடு
களையும் பின்பற்றினோம்'' என்றார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா ரேவதி திருமணம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.படம்: பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x