காஷ்மீர் எல்லையில் ஷெல் தாக்குதல்: பாக்.ராணுவத்தின் யுத்த மீறலுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் | கோப்புப் படம்.
காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் | கோப்புப் படம்.
Updated on
1 min read

காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து 13-வது நாளாக யுத்த மீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகமே கரோனா அச்சத்தில் உறைந்துபோயிருக்க, பாகிஸ்தான் ராணுவம் மட்டும் இந்திய எல்லைப் பகுதியை சீண்டிப் பார்க்கும் பணியை நிறுத்துவதாக இல்லை.

நேற்றிரவு முதல் பூஞ்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களின் மூன்று செக்டர்களில் மக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்து ஷெல் தாக்குதலை நடத்தியதோடு வெள்ளிக்கிழமை காலையும் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும் தாக்குதலில் ஈடுபட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது:

''ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின் மீதும் எல்லையோர கிராமங்களில் மக்கள் வாழும் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை தொடர்ச்சியாக 13-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

பூஞ்ச் மாவட்டத்தின் கஸ்பா மற்றும் கிர்னி செக்டர்களில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் எல்லையில் தூண்டப்படாத யுத்த நிறுத்த மீறலைத் தொடங்கியது.

இந்த அனைத்து செக்டர்களிலும் பாக். ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களுக்கு இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது''.

இவ்வாறு தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in