

சீனாவிலிருந்து ஏப்ரல் 5ம் தேதி இந்தியா வந்தடைந்த 1.7 லட்சம் கரோனா வைரஸ் தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களில் சுமார் 50,000 கிட்கள் தரநிலைப் பரிசோதனையில் தோல்வி அடைந்தன.
அதாவது உபகரணங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்த சோதனையில் 50,000 பிபிஇ கிட்கள் தோல்வியடைந்தன. ஆனால் இந்த கிட்கள் தனியார் நிறுவனங்களினால் நன்கொடையாக இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டவை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தச் சாதனங்கள் குவாலியரில் உள்ள டி.ஆர்.டி.ஓ எனும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிருவனத்தினால் சோதனை செய்யப்பட்டது. சி.இ/எஃப்.டி.ஏ சான்றிதழ் பெற்ற பாதுகாப்புச் சாதனங்கள் உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் இந்த சான்றிதழ் பெறாத கிட்கள் மட்டும் தரச் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.
இதனையடுத்துப் பற்றாக்குறையை சமாளிக்க சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் கிட்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகக்கவசங்கள், மருத்துவர்களுக்கான உடைகள், உள்ளிட்ட இந்த சாதனங்கள் மே மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூரிலிருந்து இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டிலும் பாதுகாப்பு கவச சாதனங்களின் உற்பத்தி நாளொன்றுக்கு 30,000 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.