மும்பையில் ஐசியு-க்களில் படுக்கைத் தட்டுப்பாடு: கரோனா அல்லாத நோயாளிகள் திண்டாட்டம் 

மும்பையில் ஐசியு-க்களில் படுக்கைத் தட்டுப்பாடு: கரோனா அல்லாத நோயாளிகள் திண்டாட்டம் 
Updated on
1 min read

மும்பையில் 42 வயது உனானி மருத்துவர் ஒருவருக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, கிட்னி குறைபாடுகளுடன் அவதிப்பட்டு வந்த நிலையில் ரத்தச் சுத்திகரிப்பு வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு கிடைக்க 30 மணி நேரம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையில் இவருக்கு ஐசியு கிடைக்கும் போது அவரது உடல் நிலை மிக மோசமான கட்டத்துக்குச் சென்று விட்டது. ஐசியு படுக்கை கிடைத்தாலும் கரோனா பாதிப்பு அச்சுறுத்தலினால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை.

ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவர் வர ஒப்புக் கொண்டாலும் ஆம்புலன்ஸில் உள்ள சுவாச இயந்திரத்தை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். வெறும் பிராணவாயு உதவியுடன் அவரை வேறு மருத்துவமனைக்கு இட்டுச் சென்றோம் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

கரோனா பாதிப்புக்குள்ளாகி 40 நாட்கள் ஆகி விட்டது, ஆனாலும் கரோனா அல்லாத நோயாளிகளுக்கு ஐசியு கிடைப்பதில்லை, படுக்கை கிடைப்பதில்லை பெரும் திண்டாட்டத்தை அனுபவித்து வருகின்றனர். மார்ச் 11ம் தேதி முதல் கரோனா தொற்றை மும்பை அறிவித்தது ஆனால் இன்று 2073 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் பலி எண்ணிக்கை 117 ஆக உள்ளது.

அதே போல் 49 வயதுடைய ஒருவருக்கு ஐசியு கிடைக்காமல் இறந்தே போயுள்ளார். இவரது குடும்பத்தினரும் 5 மருத்துவமனைகளை நாடினர், ஆனால் பயனில்லை.

கரோனா பாசிட்டிவ் ஆனால் நோய் குறிகுணங்கள் இல்லாத நோயாளிகள் தற்போது விடுதிகள், விருந்தினர் மாளிகைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூடுதல் முனிசிபல் கமிஷனர் சுரேஷ் ககானி தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலினால் மற்ற நீண்ட கால நோயாளிகளுக்கு மரண தறுவாயிலும் ஐசியு கிடைக்க முடியாமல் போய் வருகிறது என்பதுதான் தற்போதைய புதிய எதார்த்தமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in