ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,104ஆக அதிகரிப்பு; மோசமான நகரங்களின் வரிசையில் ஜெய்ப்பூர்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,104ஆக அதிகரிக்கும் வேளையில் கோவிட்-19க்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, மும்பை, இந்தூர், அகமதாபாத் ஆகிய மாநகரங்களின் வரிசையில் ஜெய்ப்பூர் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதில் 10,477 பேருக்கு இந்நோய் செயலில் உள்ளது. இந்நோய்க்கு ஆளானோரில் 1,489 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலாக மகாராஷ்டிராவில் 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மும்பையில் மட்டும் 985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் 1076லிருந்து 1,104பேருக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதில் சரிபாதிக்கும் சற்று குறைவாக ஜெய்ப்பூரில் மட்டுமே 485 பேருக்கு கரோனா நோய் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டில் கரோனா வைரஸுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட நகரங்களாக கருதப்படும் டெல்லி (1578), மும்பை (985), அகமதாபாத் (450) இந்தூர் (411) ஆகிய மாநகரங்களின் வரிசையில் ஜெய்ப்பூரும் இடம்பிடித்துள்ளது.

ராஜஸ்தானில் ஜோத்பூர் மற்றும் டோங்கிலிருந்து அதிக எண்ணிக்கையாக (தலா 11), கோட் மற்றும் ஜுன்ஜுனு (தலா 2) மற்றும் அஜ்மீர் மற்றும் பிகார்னர் (தலா 1) இன்று புதியதாக 28 பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

மேலும், இதுதவிர கோவிட்-19 சோதனைக்கு 5,938 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக செயல்பாட்டில் உள்ளன. எனினும் ராஜஸ்தானில் 82 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in