

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட் டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம் ஹேண்ட் வாரா வனப்பகுதியில் தீவிர வாதிகள் பதுங்கியிருப்பதாக ராணு வத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியை ராணுவ வீரர்களும் துணை ராணுவப்படை வீரர்களும் சுற்றிவளைத்தனர்.
அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடை பெற்றது. பல மணி நேரம் நீடித்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார்.
தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
மூவரும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கக் கூடும் என்று தெரிகிறது. எனவே அவர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்கவுன்ட்டர் நடந்த வனப் பகுதியில் மேலும் தீவிர வாதிகள் பதுங்கியுள்ளனரா என் பதைக் கண்டறிய தேடுதல்வேட்டை நடைபெற்று வருகிறது.