கேரளாவில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமை வார்டுகளாக மாறும் படகு வீடுகள்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள படகு வீடு (கோப்புப் படம்)
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள படகு வீடு (கோப்புப் படம்)
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 211 பேர் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் 3 பேர் கேரளாவில் இறந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் எம்.அஞ்சனா கூறும்போது, “கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டத்தில் நாங்கள் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வெற்றி கண்டோம். தற்போது 2-வது கட்டத்தில் நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் தனிமை வார்டுகள் எங்களிடம் குறைவாக உள்ள போதிலும் அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஆலப்புழாவில் பிரபலமான படகு வீடுகளை தனிமை வார்டுகளாக மாற்றுவது தொடர்பாக, படகு வீடு உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதற்கு அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். படகு வீடுகளில் உள்ள அறைகளை தனிமை வார்டுகளாக எளிதில் மாற்றமுடியும். இதன்மூலம் இங்கு 1500 முதல் 2 ஆயிரம் வரையிலான தனிமை வார்டுகள் தயாராகும். அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in