Published : 15 Apr 2020 07:55 PM
Last Updated : 15 Apr 2020 07:55 PM

நகர எல்லைக்கு வெளியே இருக்கும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்பட அனுமதி

நகரத்துக்கு வெளியே இருக்கும், ஊரகப்பகுதிகளில் இருக்கும் தொழிற்கூடங்கள், தொழிற்சாலைகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் செயலப்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் சமூக விலகல் விதிமுறைகளையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் கட்டாயம் செயல்படுத்துவது அவசியமாகும்.

புதிய லாக்-டவுன் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதே போல் பொது இடங்களில், பணி இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மதுபானம், குட்கா, புகையிலைப் பொருள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் பல தொழிற்துறைகளுக்கு சலுகைகளை அளித்துள்ளது. இது மாநில அரசின் விருப்பப்படி, மாவட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் செய்து கொள்ளலாம் இதுவும் கரோனா ஹாட்ஸ்பாட் என்று அடையாளம் காணப்படாத பகுதியாக இருப்பது அவசியம்.

கிராமப்புற தொழில்கள் மற்றும் சாலை கட்டுமானப் பணிகள், வேளாண் பணிகள், கிராமப்புற கட்டிடம் மற்றும் தொழிற்சாலை திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, கிராமப்புறங்களில் உள்ள செங்கற்சூளைகள் பணிகளைத் தொடங்கலாம்.

சமூக விலகல் நடைமுறைகள், முகக்கவசம் மற்றும் பிற பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிகள் தொடங்கலாம். எலெக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், ஐடி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் மெக்கானிக்குகள், கார்பெண்டர்கள் தொழில்களைத் தொடங்கலாம்.

தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள்:

உற்பத்தி மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்துறை நடவடிக்கைகள் தொடங்கலாம், பிற தொழிற்பேட்டைகள், டவுன்ஷிப்கள் தொடங்கலாம். அதாவது இங்கெல்லாம் பணியாளர்கள் வளாகத்துக்குள்ளேயோ அல்லது அடுத்த கட்டிடங்களிலோ தங்கலாம் என்ற நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.

தகவல்தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு, கிராமப்புற உணவுப்பதன தொழில்கள், சணல் தொழிற்சாலைகள் லாக்-டவுன் நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் துறைகளாகும். தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொடர்பான சேவைகள் தங்கல் 50% ஊழியர்களுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் காலக்கட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் அலுவலகங்கள் தொழிலாளர்களுக்கு கட்டாயம் மருத்துவக் காப்பீடு அளிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மீறல்கள் நிகழ்ந்து அது கோவிட்-19 பரவலுக்கு வழிவகை செய்யுமெனில் வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக வாபஸ் பெறப்பட்டு முழு லாக்-டவுன் அமல்படுத்தப்பட வழிவகை செய்யும் என்று எச்சரித்துள்ளது. கட்டுப்பாடுகள் எந்த நிலையிலும் நீர்த்துப் போகச் செய்யப்பட கூடாது என்று கண்டிப்பாகக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x