Last Updated : 15 Apr, 2020 07:12 PM

 

Published : 15 Apr 2020 07:12 PM
Last Updated : 15 Apr 2020 07:12 PM

கரோனா வைரஸ் தடுப்பு வாக்சைன் தயாரிப்பில் 6 இந்திய நிறுவனங்கள்:  மொத்தம் 73 செயல்பூர்வ வாக்சைன்கள் சோதனையில்.. - சவால்களும் காலநீட்சியும்

கோவிட்-19 வாக்சைன் தயாரிப்பில் 6 இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்று இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 70 வாக்சைன் மருந்துகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதில் 3 தடுப்பு மருந்துகள் மானுட சோதனை கட்டத்தை எட்டியுள்ளது, ஆனாலும் பெரிய அளவில் மக்களுக்கான கரோனா வைரஸ் தடுப்பு மருந்து 2021க்கு முன்பு தயாராவது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.

கோவிட்-19 உலகம் முழுதும் 1.9 மில்ல்லியன் மக்களை தொற்றியுள்ளது, 1,26,000 உயிர்களைப் பறித்துள்ளது. இந்நிலையில் கரோனாவுக்கு எதிரான போலரில் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளும் அங்கம் வகித்து வருகின்றனர்.

ஸைடஸ் கெடில்லா நிறுவனம் 2 வாக்சைன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன, செரம் இன்ஸ்டிட்யூட், பயலாஜிக்கல் ஈ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ், மின்வாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தலா 1 வாக்சைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன என்று பரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி கழகத்தி ன் செயல் இயக்குநர் ககந்தீப் காங் தெரிவித்துள்ளார்.

கொள்ளைநோய் தயாரிப்புநிலை மற்ரும் ஒருங்கிணைப்பு புத்தாக்கங்கள் என்ற அமைப்பின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார் கேங், இது சமீபத்திய ஆய்வில் கோவிட்-19-க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு வேகமும், அளவும் இதுவரை இல்லாதது என்று தெரிவித்துள்ளது.

இது மிகவும் சிக்கல் நிறைந்த நடைமுறை பல கட்டங்களிலான பரிசோதனைகளும் சவால்களும் நிரம்பியது என்று கூறும் நிபுணர்கள் , சார்ஸ் சிஓவி-2 வாக்சைனுக்கு 10 ஆண்டுகள் ஆகாது, ஆனால் இது பாதுகாப்பானதா, பயனளிப்பதா, என்பதை பரவலாகக் கிடைக்க செய்யும் முன் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

வாக்சைன் கண்டுபிடிப்பு என்பது மிகவும் நீண்ட கால பிரயத்தனம் ஆகும், பல ஆண்டுகள் பிடிக்கும், பல சவால்கள் ஏற்படும்., என்று ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மைய தலைமை அறிவியல் அதிகாரியும் கேரளாவைச் சேர்ந்தவருமான ஈ.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

பல கட்ட பரிசோதனைகளைக் கடந்து வாக்சைன்கள் பாஸ் ஆவது என்பது பல மாதங்கள் எடுக்கக் கூடியது என்பதை ஒப்புக் கொள்கிறார் ஹைதராபாத்தில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் சிஎஸ்ஐஆர் இயக்குநர் ராகேஷ் மிஷ்ரா.

வாக்சைன் பரிசோதனை விலங்கு மற்றும் சோதனைக்கூட பரிசோதனைகளில் தொடங்கி பலகட்டங்களிலான மனித சோதனைக் கட்டங்களை வந்தடைவதாகும்.

வாக்சைன் பரிசோதனை என்பதும் பலக்கட்டங்களில் நடத்தப்படுவதாகும். முதற்கட்ட பரிசோதனைகள் சிறிய அளவில் சில பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்படும். இது மனிதர்களுக்குப் பாதுகாப்பானதுதானா என்பதை கண்டறிய இந்தச் சோதனை அவசியம். இரண்டாம் கட்ட சோதனைகள் பல நூறு வகைகளில் நடத்தப்படும் இது குறிப்பிட்ட நோய்க்கு இந்த வாக்சைன் வேலை செய்யுமா என்பதை அறுதியிடுவதாகும்.

இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டு வாக்சைனின் திறன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதன் செயல்பாடு அறியப்படும். இது பல மாதங்கள் பிடிக்கும் என்றார் ஸ்ரீகுமார். இதனால்தான் இப்போதிலிருந்து வாக்சைன் வெளிவர ஓராண்டு பிடிக்கும்.

வாக்சைன் தயார் என்றாலும் கூட அனைத்து மக்கள் தொகுதிக்கும் இது திறம்பட செயல்படுமா என்பது அடுத்த கேள்வியாகும். மேலும் காலம் ஆக ஆக தன் உரு, இயல் மாற்றிக்கொண்டே செலும் நொவல் கரோனா வைரஸின் பல்வேறு துணை வகைமாதிரிகளுக்கும் செயல்படுமா என்பதைக் கண்டறிய வேண்டும்.

கோவிட்-19 வாக்சைன்களில் பல தற்போது முதற்கட்ட கிளினிக்கல் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன. ஆனால் இவை எவ்வளவு வேகத்தில் வாக்சைன் என்பதை நோக்கி முன்னேறும் என்று எங்களுக்குத் தெரியவில்லை பல மாதங்கள் ஆகும் என்கிறார் மிஷ்ரா.

உலகச் சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை 3 வாக்சைன்கள் கிளினிக்கல் சோதனை கட்டத்தில் உள்ளன, அதாவது மனிதனில் இதை பரிசோதிக்கும் கட்டத்தில் உள்ளன. சுமார் 70 வாக்சைன்கள் கிளினிக்கல் சோதனைக்கு முந்தைய நிலையில் உள்ளன. அதாவது சோதனைச்சாலையிலோ அல்லது விலங்குகள் ஆய்வு நிலையிலோ இந்த வாக்சைன்கள் உள்ளன.

கேங் என்பவர் 6 நிறுவனங்களை பட்டியலிட்டாலும் உலகச் சுகாதார அமைப்பு ஸைடஸ் கெடில்லா மற்றும் செரன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவை மட்டுமே உலக வாக்சைன் தயாரிப்பு நிறுவனப் பட்டியலில் சேர்த்துள்ளது. ஏப்ரல் 8, 2020 நிலவரப்படி சுமார் 115 வாக்சைன்கள் ஆய்வில் உள்ளன இதில் 78 வாக்சைன்கள் செயல்பூர்வமான பரிசோதனையில் உள்ளன, 37 வாக்சைன்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதில் முன்னேறிய பரிசோதனைக் கட்டத்தில் இருப்பது mRNA-1273 ஆகும் இது அமெரிக்காவின் பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா என்பதன் வாக்சைன் ஆகும். Ad5-nCoV என்பது சீன நிறுவனத்தின் வாக்சைன் ஆகும், INO-4800 என்பது மீண்டும் அமெரிக்க மருந்து நிறுவனமான இனோவியோவைச் சேர்ந்த்தாகும்.

இந்தப் பட்டியலில் LV-SMENP-DC என்ற சீன வாக்சைனும் அடங்கும்.

மேலும் பல வாக்சைன் தயாரிப்பாளர்கள் 2020இல் மனிதர்களில் சோதனை செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்குவதாக சி.இ.பி.ஐ. விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வவ்வால்கள், ஒட்டகங்கள், மனிதர்களை தொற்றும் மெர்ஸ், சார்ஸ் போன்ற வைரஸ்களின் மரபணு வரிசை அமைப்பைச் சேர்ந்ததே இந்த புதிய கரோனா வைரஸின் மரபணு வரிசை அமைப்பும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எப்படியும் அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் வாக்சைன் 2021ம் ஆண்டு வாக்கில்தான் உருவாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொதுவாக வாக்சைன் தயாரிக்க 10 ஆண்டுகள் ஆகும்.

நிறைய உற்சாகங்கள், நம்பிக்கைகள் இருந்தாலும் கோவிட்-19 வாக்சைன் தயாரிப்பு அதற்கேயுரிய கால அளவை எடுத்துக் கொள்ளும் என்று மிஷ்ரா கூறுகிறார்,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x