

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப்தன்கர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்த தினமான இன்று அஞ்சலி செலுத்தி வெளியிட்டுள்ள செய்தியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அறிவுரை வழங்கினார்.
ஆளுநர் தன்கர் தன் ட்வீட்டில், “நம் அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த தினத்துக்கான என் அஞ்சலி. சமூக நீதிப் போராளி, அரசியல் சாசன விதியைக் கடைப்பிடிக்குமாறு அவர் அனைவருக்கும் வலியுறுத்துகிறார். கரோனாவுக்குத்தான் லாக்டவுன், கவர்னருடனுமா லாக்-டவுன், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானடு, ஜனநாயக விரோதமானது” என்று கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சியில் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கவர்னர்கள் முதல்வர்களுடன் மோதல் போக்கைக்கடைபிடித்து அவர்கள் ஆட்சிக்கு இடையூறு விளைவித்து வருவதாக பலதரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜங் என்ற கவர்னர் கொடுத்த நெருக்கடி, பிறகு புதுச்சேரியில் கிரண் பேடிக்கும் நாராயணசாமிக்கும் இருக்கும் மோதல் போக்கு இவை பாஜக ஆட்சியில் கவர்னரின் அதிகார எல்லைகள் பற்றிய கேள்வியை மறுவரையரை செய்யக் கோரியுள்ளது.
இந்நிலையில் மம்தாவுக்கும் ஆளுநர் தன்கருக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில்தான் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, “ஜனநாயகம் அச்சுறுத்தலில், அரசியல் சாசனம் மீறப்படுகிறது” என்று மம்தாவை எச்சரித்துள்ளார்.