

லாக்-டவுன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியிருப்பதாகவும் 15 மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் புதிய கரோனா தொற்றுக்கள் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “இந்த மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக புதிய கரோனா வைரஸ் தொற்றுக்கள் இல்லை. எதிர்காலத்திலும் புதிய தொற்றுக்கள் பரவி விடமால் இருப்பதற்காக சீரான முறையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
மகாராஷ்டிராவில் கோண்டியா, சத்தீஸ்கரில் ராஜ்நந்தகன் துர்க் மற்றும் பிலாஸ்பூர், கர்நாடகாவில் தாவணகெரே, குடகு, தும்கூர், உடுப்பி ஆகிய கரோன ஹாட்ஸ்பாட் இடங்கள் இந்த புதிய தொற்றுக்கள் இல்லாத மாவட்டங்களில் அடங்கும்.
டெல்லியில் 1,455 கேஸ்களும் தமிழக்த்தில் 1104 தொற்றுக்களும் தற்போது இருந்து வருகின்றன.
ஐசிஎம்ஆர் தொற்று நோயியல் நிபுணர் ஆர். கங்காகேட்கர் கூறும்போது இதுவரை 2,06, 212 டெஸ்ட்கள் நடத்தப்பட்டுள்ளன. கவலை தேவையில்லை 6 வாரங்களுக்கு தேவையான போதிய ஸ்டாக்குகள் இருக்கிறது.
ரெம்டெசிவைர் மருந்து சில காண்நோக்கு ஆய்வுகளில் கோவிட்-19 வைரஸ் இரட்டிப்பாவதை தடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது, என்றார்.