

கரோனா தொற்றை பொறுத்தவரையில் கடந்த 14 நாட்களில் 15 மாநிலங்களில் 25 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர் ராமன் ஆர் கங்ககேத்கர் கூறியதாவது:
இதுவரை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என 2,06,212 சோதனைகள் நடத்தி உள்ளோம். தொடர்ந்து சோதனை செய்யும் அளவு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அடுத்த 6 வாரங்களுக்கு எளிதாக சோதனைகளை நடத்த முடியும்
கரோனா பாதிப்பை பொறுத்தவரையில் 15 மாநிலங்களில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் எந்த புதிய கரோனா பாதிப்புகளும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.