Last Updated : 13 Apr, 2020 01:56 PM

 

Published : 13 Apr 2020 01:56 PM
Last Updated : 13 Apr 2020 01:56 PM

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் இன்று: லாக் டவுனுக்கிடையில் தியாகிகளுக்கு ட்விட்டரில் பிரதமர் மோடி அஞ்சலி

1919, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு லாக் டவுனுக்கிடையில். தியாகிகளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த நூற்றாண்டில் பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய விடுதலைப்போர் தீவிரமடைந்துகொண்டிந்தபோது ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஏராளமான இந்தியர்கள் கூடியிருந்த ஒரே இடத்தில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளான இன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

1919-ல் இதே நாளில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினோல்ட் டையரின் உத்தரவின் பேரில் அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அறுவடைத் திருவிழாவான பைசாக்கியைக் கொண்டாடுவதற்காக கூடியிருந்த இந்திய மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் தீராத வடுவை, கரும்புள்ளியை ஏற்படுத்தியது.

கரோனா பரவலைத் தடுக்க லாக் டவுனை அறிவித்து 20-வது நாட்கள் ஆகிவிட்டன. இன்று லாக் டவுன் நீட்டிப்பு தொடர்பாக பிரதமரின் அடுத்த அறிவிப்பிற்காக நாடே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், லாக் டவுன் நீட்டிப்பு குறித்த எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருப்பினும் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளை நினைவுகூர்ந்து அவர் பதிவிட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ட்விட்டரில் #ஜாலியன்வாலாபாக் ட்ரெண்டிங் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜாலியன் வாலாபாக்கில் கடந்த ஆண்டு ஏற்கெனவே உயிர்நீத்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய படங்களையும் வெளியிட்டு இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது:

''இந்த நாளில் ஜாலியன் வாலாபாக்கில் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட இந்தத் தியாகிகளுக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் தைரியத்தையும் தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களின் துணிச்சல் பல ஆண்டுகளுக்கும் இந்தியர்களை ஊக்குவித்துக்க்கொண்டிருக்கும்.''

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x