

மகாராஷ்டிராவின் புனே நகரில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், 1,700 கி.மீ. தூரத்தை, 7 நாட்களாக சைக்கிளில் பயணித்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
ஒடிசாவின் ஜேபூர் மாவட்டம், படாசூரை கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் ஜெனா (20). இவர் மகாராஷ்டிராவின் புனே நகரில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அவர் பணியாற்றிய ஆலையும் மூடப்பட்டது.
அவரது மாத ஊதியம் ரூ.15,000. வீட்டு வாடகை, உணவுக்கு மாதம் ரூ.6,000 தேவை. அவரிடம் ரூ.3,000 மட்டுமே கையிருப்பு இருந்தது. ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல மகேஷ் ஜெனா முடிவு செய்தார்.
ஒரு பழைய சைக்கிளை வாங்கினார். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஊருக்கு செல்லும் வழி தெரி யாது. வரைபடமும் கிடையாது. ஆனால் ரயிலில் வரும்போது ரயில் நிலையங்களின் பெயர்களை நினைவில் வைத்திருந்தேன். அதன்படி எனது பயணத்தை தொடங்கினேன். முதலில் புனே வில் இருந்து சோலாப்பூர் சென் றேன். அங்கிருந்து ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், காகுளம் வழியாக ஒடிசாவுக் குள் நுழைந்தேன். நாளொன்றுக்கு 16 மணி நேரம் சைக்கிள் மிதித்தேன். ஒரு நாளில் 200 கி.மீ. தொலைவை கடந்தேன். இரவில் கோயில்கள், பள்ளிகளில் தூங்கினேன். வழியில் கிடைத்த உணவுகளை வாங்கி சாப்பிட்டேன். கையில் போதிய பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே சாப்பிட்டேன்.
மகாராஷ்டிர எல்லையில் போலீ ஸார் என்னை தடுத்து நிறுத்தி விட்டனர். அவர்களை எப்படியோ சமாளித்து பயணத்தை தொடர்ந் தேன். 7 நாட்களில் சுமார் 1,700 கி.மீ. தொலைவை கடந்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன். சில இடங்களில் லாரி ஓட்டுநர்கள், சைக்கிளோடு சேர்த்து என்னையும் ஏற்றிக் கொண்டனர். எங்களைப் போன்ற இடம்பெயரும் தொழி லாளர்களுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 7-ம் தேதி சொந்த கிராமத் துக்கு வந்த மகேஷ் ஜெனா குறித்து உள்ளூர் மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். மாவட்ட நிர்வாகத் தின் உத்தரவின்படி அங்குள்ள பள்ளியில் அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 14 நாட்களுக்குப் பிறகு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.