

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் போது, 3 வாரங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சேமித்து வைத்திருக்க முடியுமா என்ற கேள்வி்க்கு கருத்துக்கணிப்பில் மக்கள் பதில் அளித்துள்ளனர்
21 நாட்கள் லாக்டவுனை நாட்டு மக்கள் வெற்றிகரமாக முடிக்க உள்ள நிலையில் சி-வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் இணைந்து கருத்துக்கணிப்பை பல்வேறு சமூகம், வருமானம், வயது, கல்வி, மதம், பாலினத்தாரிடம் நடத்தியது.
அவர்களிடம் 3 வாரங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்திருக்கிறீ்ர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு 62.5 சதவீதம் மக்கள் 3 வாரங்களுக்கு மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்
அதேசமயம், 32.7 சதவீதம் மக்கள் 3 வாரங்களுக்கு மேலாக அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்திருக்கிறோம் எனத் தெரிவித்தனர்.
ஆனால் கருத்துக்கணிப்பில் குறைந்த வருமானம், கல்வி அடிப்படையில் 70 சதவீதம் பேர் 3 வாரங்களுக்கு மட்டுமே அத்தியாவசியப்பொருட்களை இருப்பு வைத்துள்ளனர். 30 சதவீதம் பேர் 3 வாரங்களுக்கு மேல் பொருட்களை இருப்பு வைத்துள்ளார்கள்
குறைந்த வருமானம் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க போதுமான வருமானம்இல்லாமலும், நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் 3 வாரங்களுக்கு மட்டும் தேவையான பொருட்களை இருப்பு வைத்துள்ளார்கள். இதில் உயர்ந்த வருமானம் ஈட்டும் பிரிவினர் மட்டுமே 3 வாரங்களுக்கு மேல் தேவையான பொருட்களை இருப்பு வைத்துள்ளார்கள்.
நகர்புறங்களில் 55 சதவீதம் மக்கள் 3 வாரத்துக்கும் குறைவாகவே தங்கள் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், பணத்தையும் இருப்பு வைத்துள்ளார்கள்.
அதேசமயம் கிராமம் மற்றும் சிறுநகரங்களில் உள்ள மக்கள் 3 வாரங்களுக்குத் தேவையான பொருட்களை இருப்பு வைத்துள்ளார்கள்.
அதிலும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தினர்களி்ல் 3.5 சதவீதம் குடும்பத்தினர் மட்டுமே 3 வாரங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துள்ளார்கள்.
அதேபோல் வீடுகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிக விழிப்புணர்வோடு இருந்து பொருட்களை இருப்பு வைத்துள்ளர்கள். முதியோர் இந்த சூழலைக் கருத்தில்கொண்டு சிறப்பாகத் தயாராகி மருந்துகள், பொருட்களை இருப்பு வைத்துள்ளனர்.
இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.