பொருளாதாரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர்கள் திங்கள்கிழமை முதல் அலுவலகம் வந்து பணி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

லாக்-டவுனுக்குப்பின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்து மத்திய அமைச்சர்களும் நாளை முதல்(திங்கள்கிழமை) தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட உள்ளார்கள் எனத் தகவல்கள் தெரிவி்க்கின்றன

லாக்டவுன் நீட்டிக்கப்படும் பட்சத்தில் கரோனா வைரஸ் குறைந்த அளவு பாதித்த மாவட்டங்களில் தொழில்துறைக்கும், வேளாண் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் மாநிலங்களையும், மாவட்டங்களையும் கூட சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என பிரிக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசைப் பொருத்தவரை கரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் இடங்களில் நோயைக்கட்டுக்குள் கொண்டுவருவதோடு, லாக்டவுன் நீக்கப்படும் போது பொருளாதார வளர்்ச்சியையும் தூண்டிவிட வேண்டும் எனும் நோக்கில் இருக்கிறது.

இதன்படி, அனைத்து அமைச்சர்கள், இணைச்செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், அனைவரும் நாளை முதல் அலுவலகத்துக்கு வந்துபணி தொடங்க வேண்டும், அத்தியாவசியப் பணியில் இருப்போர் மட்டும் மூன்றில் ஒரு பங்கு வந்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமல்லாமல் அரசு சார்பில் வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அனைவரும் தி்ங்கள்கிழமை முதல் பணிக்கு வழக்கம்போல் வருவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்த லாக்டவுன் காலத்தில் மத்திய சுகாதாரத்துறை, நிதித்துறை, கிராம மேம்பாடு, வேளாண்மை துறை ஆகியவைதொடர்ந்து செயல்பட்டன, ஆனால் மற்ற துறைளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் ஆகியோர் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்
மேலும், வடமாநிலங்களில் அறுவடைப் பணிகள் நடக்க இருப்பதால் வேளாண் நடவடிக்கைகளுக்கும், முக்கிய தொழில்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு மத்திய அரசு அடுத்தடுத்து முடிவுகள எடுக்கும் எனத் தெரிகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in