

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலை யில் மேற்கு வங்க மாநிலத்தில் சிறிது சிறிதாக ஊரடங்கு உத் தரவை அந்த மாநில அரசு தளர்த்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பாக மேற்கு வங்க மாநில தலைமைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலை யில் மேங்கு வங்கத்தில் அத்தியா வசியம் இல்லாத கடைகள் திறந்திருக்க மேற்கு வங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் காய்கறி, மீன், ஆட்டு இறைச்சி சந்தைகளில் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது. இதற் கான சரியான விதிகளை மேற்கு வங்க மாநில அரசு பின்பற்ற வில்லை.
மேற்கு வங்கத்தின் ராஜாபஜார், நார்கெல் தாங்கா, டாப்சியா, மெட்டியாபர்ஸ், கார்டன்ரீச், இக் பால்பூர், மணிக்தல ஆகிய பகுதி களில் விதிமுறைகள் மீறப்பட்டுள் ளன. இப்பகுதிகளில் அதிக அள வில் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.
சமூக விலகலைக் கடைப் பிடிக்காவிட்டால் கரோனா பாதிப்பு அதிகமாகும். எனவே ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் தீவிரமாக கடைபிடிக்க வேண் டும். அதேபோல் அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யாமல், அரசியல் தலைவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு விநியோகம் செய்ய வும் போலீஸார் அனுமதித்துள் ளனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ