

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் புகலிடம் ஒன்றில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமானஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த பல நாட்களாக பாகிஸ் தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ 300 தீவிரவாதிகள் தயாராக காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவலின் பேரில், ராம்பன் மாவட்டம் குல் பகுதியில் உள்ள தத்தர்கா என்ற கிராமத்தில் ராணுவ வீரர்களும் போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்று கண்டறியப்பட்டது.
இதிலிருந்து கையெறி குண்டுகள், எறிகுண்டு லாஞ்சர்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி குண்டுகள், வெடிமருந்து, வயர்கள், டெட்டனேட்டர்கள், ரேடியோ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற் றினர்.
தொடர்ந்து அப்பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிர வாதிகள் எவரும் சிக்கவில்லை. எனினும் ஆயுதங்கள் பறிமுதல் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.