Last Updated : 11 Apr, 2020 03:42 PM

 

Published : 11 Apr 2020 03:42 PM
Last Updated : 11 Apr 2020 03:42 PM

இந்தியர்கள் அதிகம் வாழும் யு.எஸ் ஜெர்சி நகரில் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை: அங்கும் உதவிக்கரங்களை நீட்டும் இந்தியர்கள்

அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சியில் ஜெர்சி நகரின் ஒரு சிலபகுதிகள் மினி இந்தியா என்று அழைக்கப்படும் அளவுக்கு இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது.

இந்த நகரில் 12 இந்தியர்கள் கரோனாவுக்குப் பலியாகியுள்ளார்கள்.

ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெர்சி வாசி பவேஷ் தவே, இவர் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை ஓக் ட்ரீ சாலையில் நடத்தி வருகிறார், அவர் கூறும்போது, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நாங்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை.” என்றார்.

பலியானவர்களில் ஒருவர் சன்னோவா அனலிடிக்கல் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹன்மந்த ராவ் மாரப்பள்ளி என்பவர். இவர் நியூ ஜெர்சியில் எடிசனில் காலமானர், இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஜெர்சி நகரின் இந்திய சதுக்கத்தில் பிரபலமான சந்திரகாந்த் அமின் 75 வயதில் நுவல் கரோனா வைரசுக்குப் பலியானார்.

நியு ஜெர்சியில் 400க்கும் அதிகமான இந்திய அமெரிக்கர்கள் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். நியுயார்க்கில் 1000 பேருக்கு மேல் இந்தியர்கள் கரோனா தொற்றில் சிக்கியுள்ளனர்.

ஜெர்சி நகரில் நீலா பாண்டியா என்ற குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் குஜராத்தி மொழியில் பேசி பகிர்ந்த வீடியோவில் இந்த வைரஸை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றதோடு, தன் வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று இருந்தது என்றும் அனைவரும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் என்ரும் ஆனால் உள்ளூர் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் 2 பேரை மட்டுமே அனுமதித்ததாகவும் 3பேர் வீட்டிலேயே இருந்து மருத்துவம் பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறியதாகவும் வீடியோவில் தெரிவித்தார்.

அங்கு இந்திய அமெரிக்கர்களிடையே கடும் பதற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அஜித், சச்சின் மற்றும் சஞ்சய் மோடி ஆகியோர் வெஜிடேரியன் உணவுகளை இலவசமாக ஜெர்சி சிட்டி மெடிக்கல் செண்டருக்கு அளித்துள்ளனர்.

ஓக் ட்ரீ இடத்தைச் சேர்ந்த தவே, மருத்துவப் பணியாளர்களுக்கு 1,000 முகக்கவசங்களை அளிக்க நன்கொடை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

நியூயார்க், நியு ஜெர்சி, மேரிலேண்ட், வர்ஜினியா, புளோரிடா, பென்சில்வேனியாவில் பல ஓட்டல்கள் இலவசமாக உணவுகளைத் தயாரித்து அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவின் உலக இந்து கவுன்சில் ஊழியர்கள் லோவெல் ஜெனரல் மருத்துவமனைக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர். மேலும் உள்ளூர் போலீஸாருக்கு 85,000 கிளவ்களையும் இவர்கள் தந்து உதவியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x