

பெங்களூருவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தடுக்க மாநக ராட்சி பல்வேறு புதிய திட்டங் களை அமல்படுத்தி வருகிறது. பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ. 100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல வீடு, கடை, வணிக வளாகங்களில் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். குப்பையை பிரிக்காமல் போடுபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த வகையில் தற்போது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர், மலம் கழிப்பது, வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களில் மலம் கழிக்க செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை ரூ. 100, 2-வது முறையாக குற்றமிழைத்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
இதுதொடர்பான அறிக்கைக்கு கர்நாடக அரசின் சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.