Published : 10 Apr 2020 04:35 PM
Last Updated : 10 Apr 2020 04:35 PM

ஊரடங்கு; ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கும்?- ரயில்வே விளக்கம்

பயணிகள் ரயில்களின் பயணத் திட்டங்கள், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குதல் குறித்து வெளியான செய்திகளுக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரயில் பயணிகளின் பல்வேறு வருங்காலத் திட்டங்கள் குறித்த சில‌ செய்திகள் கடந்த இரு தினங்களாக ஊடகங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. பல ரயில்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து பயணத்தை தொடங்குவதாகவும் அவை தெரிவிக்கின்றன.

மேற்கண்ட விஷயங்கள் குறித்தான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பதையும், அதற்கு முன்னரே இவ்வாறு செய்தி வெளியிடுவது தேவையில்லாத, தவிர்க்கத்தக்க யூகங்களை, தற்போதைய அசாதாரண‌ சூழலில் மக்களின் மனங்களில் ஏற்படுத்துவதையும் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

அத்தகைய யூகங்களுக்கு வழி வகுக்கும் உறுதி செய்யப்படாத அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடாமல் தவிர்ப்பதை பரிசீலிக்குமாறு ஊடகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு அறிவுறுத்தப்படுகின்றன.

ஊரடங்கு நடவடிக்கைக்கு பிந்தைய ரயில் பயணம் குறித்து, பயணிகள் உட்படத் தனக்கு தொடர்புடைய அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சிறந்த சாத்தியமான முடிவுகளை ரயில்வே எடுக்கும்.

அப்படி ஒரு முடிவெடுத்தவுடன், தொடர்புடைய அனைவருக்கும் அதைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x