

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுவாசச் சுரப்புகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் உறிஞ்சு பொருளை ஶ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, திருவனந்தபுரம், ஶ்ரீசித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், தொற்றால் பாதிக்கப்பட்ட சுவாசச் சுரப்புகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் உறிஞ்சு பொருளை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.
சுவாச உறுப்புகளில் உள்ள திரவம் மற்றும் உடலில் கெட்டிப்படும் இதர திரவங்களை சிறந்த முறையில் உறிஞ்சி எடுத்து தொற்றை நீக்கும் தன்மை கொண்டது இது.
ஶ்ரீசித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உயிரி மருத்துவத் தொழில்நுட்பப்பிரிவின், உயிர்ப்பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் டாக்டர். மஞ்சு, டாக்டர். மனோஜ் கோமத் ஆகியோர் “Chitra Acrylosorb Secretion Solidification System” அக்ரிலோசார்ப் செக்ரீசன் சாலிடிபிகேசன் சிஸ்டம் எனப் பெயரிடப்பட்ட இந்தப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
இது, சுவாச உறுப்புகளில் உள்ள திரவம் மற்றும் உடலில் கெட்டிப்படும் இதர திரவங்களைச் சிறந்த முறையில் உறிஞ்சி எடுத்து தொற்றை நீக்கும் தன்மை கொண்டது.
‘’தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சுரப்புகளை பாதுகாப்பாக அகற்றுவது, மிக முக்கியமான முறையாகும். பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தி தொற்றை நீக்குவதற்கு முன்பாக, சுவாச உறுப்பு திரவங்களை உறிஞ்சி எடுப்பதற்கான, களிம்புடன் கூடிய பொருள்.
பாதுகாப்பான சிகிச்சை முறையைத் தரக்கூடியது‘’ என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர். அசுதோஷ் சர்மா கூறியுள்ளார்.
அக்ரிலோசார்ப் என்னும் இந்தப் பொருள், திரவங்கள் காய்வதற்கு முன்பாக குறைந்தது 20 முறை உறிஞ்சக்கூடியதாகும். அத்துடன், தொற்றை நீக்கி, தூய்மைப்படுத்தும் வேலையையும் செய்யக்கூடியது. இந்தத் தொழில்நுட்பம், மருத்துவமனைப் பணியாளர்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தைக் குறைப்பதுடன், மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படும் பாட்டில்கள் மற்றும் கேன்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்ப தூய்மைப்படுத்தி, தொற்று நீக்கவும், அவற்றை எளிதாகவும், பாதுகாப்பாகவும் அகற்றவும் பயன்படும்.
கரோனா உட்பட தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
தகவல்: பிஐபி