3 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா டெஸ்ட்டில் தொற்று உறுதி  

3 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா டெஸ்ட்டில் தொற்று உறுதி  
Updated on
1 min read

டெல்லி தப்லீக் ஜமாத் மதநிகழ்வில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச முசாபர்நகரைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை மருத்துவ அதிகாரி பிரவீண் சோப்ரா கூறும்போது, ஜமாத்தின் 27 உறுப்பினர்களின் சாம்பிள்களைச் சோதித்த போது 3 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என்று வந்தது என்றார்.

இவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு விட்டதால் இவர்களிடமிருந்து பரவும் சாத்தியமில்லை என்றார். இதற்கிடையே நொய்டாவில் ஒரு பெண்ணுக்கு கரோனா பாசிட்டிவ் தெரியவந்துள்ளது.

“உத்தரப் பிரதேசத்தில் 361 பேரும், ராஜஸ்தானில் 381 பேரும், ஆந்திராவில் 348 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 229 பேரும், கர்நாடகாவில் 181 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 179 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 158, மேற்கு வங்கத்தில் 103, பஞ்சாபில் 101, ஹரியாணாவில் 147, பிஹாரில் 38, அசாமில் 28, உத்தரகாண்ட்டில் 33, ஒடிசாவில் 42, சண்டிகரில் 18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 18 பேர், புதுச்சேரியில் 5 பேர், ஜார்க்கண்ட்டில் 4 பேர், மணிப்பூரில் , மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in