

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் தொடர்புடைய 1,826 பேர்செல்போன் நிறுவனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றுமகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி நிஜாமுத்தீனில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்டவெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள், தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 25,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
வெளிநாட்டினர்..
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் நாடு முழுவதும் 17 மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் டெல்லி தப்லீக் மாநாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது:
மகாராஷ்டிராவை சேர்ந்த பலர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் என 1,885 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
செல்போன் நிறுவனங்கள்..
இதில் 1,826 பேர் செல்போன் நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் மும்பையில் மட்டும் 1,061 பேர் உள்ளனர்.
மீதமுள்ள 59 பேர் செல்போனை அணைத்து வைத்துள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் தாங்களாக வெளியே வராவிட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லிதப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 23 பேருக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.