

அசாமில் கரோனா வைரஸ்தொற்றுக்கான மருத்துவமனைகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ அமிமுல் இஸ்லாமை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அசாமில் கரோனா நோய்த்தொற்றுக்கான மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் இடங்கள், தடுப்புக் காவல் மையங்களைவிட மோசமாக உள்ளன என்று அமிமுல் இஸ்லாம் தொலைபேசியில் மற்றொருவருடன் பேசும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நேற்று காலையில் கைது செய்தனர்.