

கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 354 ேபர் என அதிகரித்து 4 ஆயிரத்து 421 ஆகஅதிகரித்துள்ளது. ஒரேநாளில் 5 பேர் இறந்ததையடுத்து, பலியானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 45 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள். அடுத்த இடத்தில் குஜராதத்தில் 12 பேரும், மத்தியப்பிரதேத்தில் 9 பேரும், டெல்லி, தெங்கானாவில் தலா 7 பேரும், பஞ்சாபில் 6 பேரும், தமிழகம், கர்நாடகாவில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளார்கள்
ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் தலா 3 பேரும், ஜம்மு காஷ்மீர், , கேரளாவில் தலா 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். பிஹார், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 56 பேர் குணமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 ேபர் குணமடைந்துள்ளனர்., டெல்லியில் 523 பேர் பாதிக்கப்படடுள்ளனர், 19 பேர் குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் 321 பேரும், கேரளவில் 327 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 305 பேரும், ராஜஸ்தானில் 288 பேரும், ஆந்திராவில் 266 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 165 பேரும், கர்நாடகாவில் 151 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 144 பேரும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
ஜம்மு காஷ்மீரில் 109 பேரும், மேற்கு வங்கத்தில் 91 பேரும், பஞ்சாபில் 76 பேரும், ஹரியாணாவில் 90 பேரும், பிஹாரில் 32, அசாமில் 26, உத்தரகாண்ட்டில் 31, ஒடிசாவில் 21,சண்டிகரில்18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 14 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அந்தமான் நிகோபர் தீவில் 10 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 13 பேர், புதுச்சேரியில் 5 பேரும், ஜார்க்கண்ட்டில் 4 பேரும், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவரும் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது