

மக்கள் சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான வாய்ப்பை, இந்தியாவுக்கு கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது, இதற்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெறுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய மக்கள் சாதி, மதம், வகுப்பு ஆகிய வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக நம் நாட்டுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு அமைந்துள்ளது.
கரோனா வைரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே பொது நோக்கத்துக்காக அவர்கள் ஒன்று திரள்வார்கள். கருணை, இரக்கம், சுய தியாகம் ஆகியவையே இதற்கான மையமாக விளங்கும். இந்திய மக்கள் ஒன்றிணைந்து, கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.